உள்ளூர் செய்திகள்
தொழிலதிபர் வீட்டை சூறையாடிய 2 பேர் கைது
- அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
- வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவை வீடு புகுந்து அடித்து உடைத்து சேதம் ஆக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
நீலகிரி மாவட்டம், கோரம்பாடி பகுதியை சேர்ந்தவர் சபுஜோசப் (வயது41). இவர் பெங்களூருவில் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பெலகரை கிராமத்தில் புதிய வீடு கட்டி வசித்து வந்தார். நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் நீங்கள் ஏன் நிலம் வாங்கி இங்கு வீடு கட்டி இருக்குறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சபுஜோசப்பின் வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவை வீடு புகுந்து அடித்து உடைத்து சேதம் ஆக்கியுள்ளனர்.
இது குறித்து அவர் தளி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வீட்டை சூறையாடிய மாது, மாதேஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.