உள்ளூர் செய்திகள்

விவசாயியிடம் ரூ.8.50 லட்சம் மோசடி 2 பேர் கைது

Published On 2023-03-24 15:46 IST   |   Update On 2023-03-24 15:46:00 IST
  • லோகநாதனிடம் முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள் அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
  • முனிராஜ் பணத்தை திருப்பி கொடுக்கமுடியாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

ராயக்கோட்டை,

கோவை மாவட்டம், சவுரிபாளையம் வி.ஒ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது56). விவசாயி.

இவருடைய நண்பர் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மல்லூப்பட்டி பகுதியை சேர்ந்த முனிராஜ் இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில் லோகநாதனிடம் முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள் அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் அருகே முனிராஜ் நண்பர்களுடன் காரில் வந்து பணத்தை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் பணத்தை வாங்கிகொண்டு இது நாள்வரையிலும் எவ்வித பணமும் கொடுக்கமல் ஏமாற்றி வந்துள்ளதை அடுத்து பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டுள்ளார்.

அதற்கு முனிராஜ் பணத்தை திருப்பி கொடுக்கமுடியாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து ராயக்கோட்டை போலீசில் லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து முனிராஜ் நண்பர்களான பாலக்கோட்டை சேர்ந்த சக்திவேல் (26), ஜக்கசமுத்திரம் தமிழரசன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News