உள்ளூர் செய்திகள்

ஓமலூர் அருகே 2 பேர் கைது

Published On 2022-06-18 12:38 IST   |   Update On 2022-06-18 12:38:00 IST
ஓமலூர் அருகே இரிடியம் மோசடியில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சர்க்கரை செட்டி பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 54) , பாத்தியம் பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(55). இரிடியம் இருப்பதாக பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டதால் 2 பேரை ஓமலூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து அம்மன் சிலை ,இரண்டு மான்கொம்பு, மாயக் கற்கள் 47 ,கிறிஸ்டல் மாலை ,1.5 கிலோ கலிபோர்னிய கல், பணம் எண்ணும் எந்திரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் நூதன மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து இரண்டு மாதத்திற்கு முன் தகவல் கிடைத்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .அவரிடம் பறிமுதல் செய்த பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் உண்மைத்தன்மை கண்டறிந்து உரிய துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

இதுதொடர்பான மோசடி குறித்து 6 பேர் புகார் அளித்த நிலையில் 2 பேர் புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் புகார்களில் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உட்பட தமிழகம் முழுவதும் மக்கள் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்ததால் அது குறித்து தகவல் அளிக்கவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கைதான 2 பேரும் சங்கிலி தொடர்போல லிங்க் அமைத்து பிற மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்டு வருவது குறித்தும் தனிப்படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக யாரிடமும் ஏமாற வேண்டாம் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .

விரைவில் இதில் தொடர்புடைய மேலும் பலர் சிக்குவார்கள் என்று இந்த கும்பல் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டி உள்ளது தற்போது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கைதான 2 வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கூடுதல் விவரங்கள் பெறுவதற்காக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News