எலக்ட்ரீசியனை கத்தியால் குத்திய 2 பேர் கைது
- கோபி யின் தம்பி எலக்ட்ரீசியன் மாதேஸ்(24) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.
- ஆத்திரமடைந்த இருவரும் கோபியை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்க னிக்கோட்டை அருகே, கெத்தல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் கோபி (வயது29).
இவருக்கும், கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே உஸ்கூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா(24) மற்றும் கோவிந்த்(32) ஆகியோருக்குமி டையே குடும்பத்தகராறில் முன்விரோதம் உள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம், இருவரும் கோபியிடம் தகராறு செய்துள்ளனர். அதனை கோபி யின் தம்பி எலக்ட்ரீசியன் மாதேஸ்(24) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இருவரும் கோபியை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில், படுகாயமடைந்த மாதேஸ் தேன்கனிக்கோட்டை அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து கிருஷ்ணா, கோவிந்த் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், 2 பேரையும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒசூர் சிறையில் அடைத்தனர்.