உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2023-02-27 13:56 IST   |   Update On 2023-02-27 13:56:00 IST
  • ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுஅப்துல் கபூர் தலைமையில் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் நேற்று திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதனை ஓட்டி வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 110 லிட்டர் அளவில் சாராயம் மற்றும் 750 மி.லி அளவு கொண்ட 72 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

ரூ 1 லட்சம் மதிப்பிலான அந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனை கடத்தி வந்த காரைக்கால் திருமலை ராஜன்பட்டினம் போலகம் வடக்கு தெருவை சேர்ந்த கரன் (25) மற்றும் அதே தெருவை சேர்ந்த முருகேஷ் (21) இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News