உள்ளூர் செய்திகள்
மதுபானம் பதுக்கி விற்ற 2 பேர் கைது
- வீட்டில் பதுக்கி வைத்து அரசு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
- 30 குவாட்டர் பாட்டில் என மொத்தம் 60 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மாரண்டஅள்ளி
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
அப்ேபாது பெல்லுஅள்ளி கிராமத்தில் விஜயகுமார் (வயது42) என்பவரும், கரகூர் கிராமத்தில் செல்வகுமார் (37) என்பவரும் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 30 குவாட்டர் பாட்டில் என மொத்தம் 60 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.