உள்ளூர் செய்திகள்
- போலீசார் விசாரணை நடத்தி கோவிந்தராஜ், வரதராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- போலீசார் மாரிமுத்து, அவரது மனைவி பஞ்சு (38) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சளகிரியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் அர்ஜூன் (வயது 17). கூலித் தொழிலாளி. இவரது உறவினர் கோவிந்தராஜ் (28).
இந்த நிலையில் இவர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில், அர்ஜூனும், அவரது தந்தை மாரிமுத்துவும் தாக்கப்பட்டனர். அது குறித்து அர்ஜூன் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோவிந்தராஜ், வரதராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதே போல வரதராஜ் மற்றொரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன் பேரில், போலீசார் மாரிமுத்து, அவரது மனைவி பஞ்சு (38) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.