உள்ளூர் செய்திகள்

நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-09-07 15:36 IST   |   Update On 2023-09-07 15:36:00 IST
  • முனிராஜ் என்பவரின் நிலத்தில் இறந்தவரின் உடலை புதைக்க குழி தோண்டி கொண்டிருந்தனர்.
  • ஆத்திர மடைந்தவர்கள் முனிராஜை கடுமையாக தாக்கி உள்ளனர்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சாமனுர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 42) விவசாயி.இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் (48), வடிவேல் (47), அருள் பிரகாஷ் (42), பரந்தாமன் (46), கோவிந்தராஜ் (48), அசோகன் (47), கிருஷ்ணமூர்த்தி ( 48), ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 7 பேரும் முனிராஜ் என்பவரின் நிலத்தில் இறந்தவரின் உடலை புதைக்க குழி தோண்டி கொண்டிருந்தனர். இதனை கண்ட முனிராஜ் இவர்களை கண்டித்து குழி தோண்டு வதை தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திர மடைந்தவர்கள் முனிராஜை கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த முனிராஜ் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து முனிராஜ் அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வடிவேல், கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News