உள்ளூர் செய்திகள்

விருதாச்சலம் தாலுகா மும்முடி சோழகன் கிராம மக்கள் கடலூர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

மும்முடிசோழகன் கிராம மக்களுக்கு 10 சென்ட் வீட்டு மனையுடன் 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை மனு

Published On 2023-09-19 09:09 GMT   |   Update On 2023-09-19 09:09 GMT
  • மாற்று மனையில் புதிய வீடு கட்டி கொடுத்துவிட்டு, பிறகு வீடு மனைகளை கையகப்படுத்த வேண்டும்.
  • விவசாயிகளுக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும்.

கடலூர்:

விருத்தாசலம் அருகே உள்ள மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மும்முடிசோழகன் கிராமத்தில் கடந்த 2000 முதல் 2007-ம் ஆண்டு வரை நில எடுப்பு செய்த வீட்டு மனைகளுக்கு புதிய சட்டத்தின் படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மாற்று மனையில் புதிய வீடு கட்டி கொடுத்துவிட்டு, பிறகு வீடு மனைகளை கையகப்படுத்த வேண்டும். மேலும் விடுபட்ட மக்களுக்கு கருணைத்தொகை வழங்கிட வேண்டும். எங்கள் நிலங்களை சமன் செய்ய என்.எல்.சி. நிறுவனம் கட்டாயப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

ஆகையால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பஞ்சப்படியாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக வீடுமனைகளை எடுத்துக்கொண்டு நிரந்தர வேலை, புதிய சட்டத்தின்படி குடியிருப்புடன் கூடிய மாற்றுமனை வழங்கிட வேண்டும். மேலும் தற்போது வசிக்கும் வீட்டு மனைகளை எடுக்கும் வரை எங்கள் நிலங்களை சமன் செய்வதோ, நீர் பாசனத்தை நிறுத்துவதோ செய்யக்கூடாது. 2000-ம் ஆண்டு முதல் கூடுதல் இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகளுக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். எங்கள் கிராம மக்களுக்கு மாற்று மனையாக 10 சென்ட் இடமும், 2 ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News