உள்ளூர் செய்திகள்

ஸ்ரீமுஷ்ணத்தில் அதிரடி மளிகை கடையில் 183 கிலோ குட்கா பறிமுதல்:10 பேர் கைது

Published On 2023-01-29 08:47 GMT   |   Update On 2023-01-29 08:48 GMT
  • கடையில் சோதனை செய்து போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது.
  • ஆளவந்தான், அனவரதன், வேத நாராயணன், சேட்டு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரின் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் ராமாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்து போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பார்த்த போது ஹான்ஸ், பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் சுமார் 183 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமாபுரம் சேர்ந்த ஆளவந்தான், அனவரதன், வேத நாராயணன், சேட்டு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆள வந்தார், அனவரதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல் பண்ருட்டி, விருதாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பாதிரிப்புலியூர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், முத்தாண்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் 8 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags:    

Similar News