உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் சோதனை போதையில் வாகனம் ஓட்டிய 16 பேர் மீது வழக்கு

Published On 2023-03-24 15:05 IST   |   Update On 2023-03-24 15:05:00 IST
  • பண்ருட்டி நகரம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர்.
  • மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த 16 பேர் பிடிபட்டனர்.

கடலூர்:

பண்ருட்டியில் ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் நடந்தது. இதில் பண்ருட்டி நகரம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர். பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காட்டும் கேமராவையும் போலீசார் எடுத்துச் சென்றனர். இதன் மூலம் 100 பேர் சோத னைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 2 பழைய குற்றவாளிகள் அடையாளம் காண ப்பட்டனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் வாகன சோதனையும் தீவிரமாக நேற்று நடைபெற்றது. சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த 16 பேர் பிடிபட்டனர். இது தவிர விதிமீறல் வாகனங்களும் போலீசாரிடம் சிக்கின. மொத்தம் 172 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனைத்து வாகனங்களின் பதிவு எண்கள் சரிபார்க்க ப்பட்டது.

Tags:    

Similar News