உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை
- சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும்.
- விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற கடைகள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும்.
அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.