உள்ளூர் செய்திகள்

பொன்னேரி ஓம்கார பரதநாட்டிய பள்ளியின் 15ஆம் ஆண்டு சலங்கை பூஜை

Published On 2023-01-05 12:18 GMT   |   Update On 2023-01-05 12:18 GMT
  • பள்ளி மாணவர்கள் கற்றுக் கொண்ட பரதநாட்டிய நடனத்தை தங்களது பெற்றோர்கள் முன்பு அரங்கேற்றினர்.
  • பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஓம்கார பரதநாட்டிய பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக பரதநாட்டிய கலையை நாட்டிய ரத்தினம் பிரதீஸ் சிவானந்தன், நடன பூசனம் ஷீபா பிரதீஷ் ஆகியோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்து வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று சலங்கை பூஜை அரங்கேற்றிய நிலையில், பரதநாட்டிய பள்ளியின் 15ஆவது சலங்கை பூஜை பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் பயின்ற புஷ்பாஞ்சலி அலாரிப்பு, கவுத்துவம், ஜதீஸ்வரம், குச்சிப்புடி ஆகிய நடனங்களை சலங்கை ஒலி பூஜையாக நிறைவேற்றினார்கள். பள்ளி மாணவர்கள் கற்றுக் கொண்ட பரதநாட்டிய நடனத்தை தங்களது பெற்றோர்கள் முன்பு அரங்கேற்றினர்.

விழாவில் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார். 19ஆவது வார்டு நகர்மன்ற கவுன்சிலர் நல்ல சிவம் வழக்கறிஞர் ஸ்ரீதர் பாபு மற்றும் மாணவர்கள் பிரகாஷ் தீக்க்ஷா, துவானி, ஜோஸ்லின் ரெய்னா, ஜெஸ்மிதா, காவேரி, மோனிகா, ரித்திதா ஸ்ரீ, நிவிதா, ரிஷிதா ஸ்ரீ, ராகவி, சிந்துஜா, வணிஸ்கா ஸ்ரீ, மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News