உள்ளூர் செய்திகள்

கோவை புறநகரில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

Published On 2023-01-19 15:02 IST   |   Update On 2023-01-19 15:02:00 IST
  • பொங்கல் பண்டிகையையொட்டி தடை மீறி சேவல் சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
  • 2 சேவல்கள் ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை,

கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி தடை மீறி சேவல் சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பேரூர் போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள பரியல் மைதானத்தில் சேவல் சூதாட்டம் நடப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சேவல் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 சேவல்கள், ரூ.500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதே போல ஆனைமலை போலீசார் இருட்டுப்பள்ளம் பகுதியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சேவல்கள், ரூ.550 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி கிழக்கு போலீசார் மோதிபுரத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 சேவல்கள், ரூ.500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கிணத்துக்கடவு போலீசார் எஸ்.மேட்டுப்பாளையத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News