உள்ளூர் செய்திகள்
மதுபாட்டில்கள் கடத்தியதாக கைதான 2 பேரை படத்தில் காணலாம்.
15 மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது
- 15 மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 100 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் மயிலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்குளி பகுதியில் நேற்று வாகன சோதனையை செய்தார். அப்போது அந்த வழியாக இரண்டு நபர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படி வந்தனர். உடனே போலீசார் அவர்களை நிறுத்திவிசாரணை செய்தனர். விசாரணையில் புதுவை மாநிலத்திலிருந்து திண்டிவனம் செய்யாருக்கு மதுபானம் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இளநீர் குன்றம் ஏரிக்கரைபகுதியை சேர்ந்த ராஜா (வயது 32) அத்தி கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (21) இருவரை யும் கைது செய்தனர். அவர்களி டமிருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது.