உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

15-ந்தேதி நடக்கிறது தேனி மாவட்டத்தில் 130 கிராமசபை கூட்டம்

Published On 2022-08-13 11:17 IST   |   Update On 2022-08-13 11:17:00 IST
  • தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவரால் நடத்தப்பட உள்ளது.
  • கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந்தேதி காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவரால் நடத்தப்பட உள்ளது.

இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூகஇடைவெளியை கடைபிடித்து கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News