உள்ளூர் செய்திகள்

பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தாமரை பன்னாட்டு பள்ளியில் 13-வது விளையாட்டு விழா

Published On 2022-07-30 10:56 GMT   |   Update On 2022-07-30 10:56 GMT
  • மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நடந்தது.
  • தடகள போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 13- வது தொடக்கநிலை வகுப்பிற்கான விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், தொடக்கநிலை முதல்வர் ஏஞ்சலின் வில்லியம்ஸ், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நால்வண்ண மாணவர்களின் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையினையும் சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

தடகளப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். டியூலிப் அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் சக்திபாலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.

Tags:    

Similar News