உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சின்னமனூரில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 11 பேர் கைது

Published On 2023-08-05 12:35 IST   |   Update On 2023-08-05 12:35:00 IST
  • தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி களை கைது செய்வதாக உறுதி அளித்த தின் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்ன மனூர் அய்யன்கோவில் தெருவை சேர்ந்த நாரா யணன் மகன் சாமிநாதன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பின ருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் அங்குள்ள பகவதியம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றார்.

அப்போது ஒரு கும்பல் சாமிநாதனை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்க ளுடன் கடுமையாக தாக்கினர். இதில் சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி களை கைது செய்வதாக உறுதி அளித்த தின் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது. இந்நிலை யில் சாமிநாதனை அரிவா ளால் வெட்டிய சந்தன காளை, சூரியபிரகாஷ், சந்தோஷ், பழனிக்குமார், நாக ஜெயராம், குபேந்திரன், பாண்டி, ஒண்டி, பால்பாண்டி, செந்தில், எர்ணக்காளை ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News