உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு-கோவை மாவட்டம் 93.49 சதவீதம் தேர்ச்சி

Published On 2023-05-19 09:35 GMT   |   Update On 2023-05-19 09:35 GMT
  • இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.
  • தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்

கோவை,

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது.

கோவை மாவட்டத்தில் 526 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 81 மாணவர்கள், 20 ஆயிரத்து 175 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 256 பேர் இந்த தேர்வை எழுதினர்.

இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 40 ஆயிரத்து 256 மாணவ, மாணவிகளில் 18 ஆயிரத்து 221 மாணவர்கள், 19 ஆயிரத்து 416 மாணவியர் என மொத்தம் 37 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.49 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.11 சதவீதம் அதிகம்.

13-வது இடம்

தேர்வு எழுதிய மாண வர்களில் 90.74 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.24 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 9-வது இடம் பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 12,638 பள்ளிகளை சேர்ந்தவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 91.58 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 83.25 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3,718 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.

கோவை மத்திய சிறையில் 45 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 47 பேர் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை எழுதினார்கள். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News