உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் தொழில் தொடங்க 229 நபர்களுக்கு ரூ.10.96 கோடி மானியம்

Update: 2022-06-30 09:59 GMT
  • தொழில் தொடங்க ஒரு அற்புதமான திட்டம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் ஆகும்.
  • 61 நபர்களுக்கு ரூ.8.40 கோடி திட்ட மதிப்பீட்டில் நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.2.10 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோவை:

சுயமாக தொழில் தொடங்க ஒரு அற்புதமான திட்டம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்க பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 10 சதவித்த மானியம் கூடுதலாக வழங்கப்படும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரை திட்ட மதிப்பீட்டில் வியாபார தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக 344 நிறுவனங்களுக்கு ரூ.32.30 கோடி என மொத்தம் 399 நிறுவனங்களுக்கு ரூ.37.31 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 94 நபர்களுக்கு ரூ.2.73 கோடி மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 61 நபர்களுக்கு ரூ.8.40 கோடி திட்ட மதிப்பீட்டில் நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.2.10 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2021-2022-ம் ஆண்டுகளில் 325 நபர்களுக்கு ரூ.1.85 கோடி மானியமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 126 நபர்களுக்கு ரூ.5.80 கோடி திட்ட மதிப்பீட்டில், நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.1.45 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க 229 நபர்களுக்கு ரூ.43.93 கோடி கடனுதவிக்கு ரூ.10.96 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். மானியம் பெற்றவர்கள் முதல்-அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News