உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.

நெல்லையில் 105 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்- கடை உரிமையாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

Published On 2023-06-23 14:47 IST   |   Update On 2023-06-23 14:47:00 IST
  • அதிகாரிகள் கடைகளில் நேரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.
  • ஆய்வின்போது பிளாஸ்டிக் தட்டு, கவர்கள் என 105 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின்படி மாநகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா ஆகியோர் தலைமையில் டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் ரதவீதிகளில் உள்ள கடைகளில் நேரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், செல்லப்பாண்டி மற்றும் சங்கரநாராயணன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் முருகேசன், சாகுல், இளங்கோ ஆகியோர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், பாலு சங்கரநாராயணன் முருகன் அந்தோனி, பெருமாள் ஆகியோர் கடைகள் வணிக நிறுவனங்களில் சோதனை செய்தனர்.

தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், சேக், மேஸ்திரிகள் சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் சூர்யா, மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 4 ரத வீதிகளிலும் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், கவர்கள் என 105 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அபராதமாக மொத்தம் ரூ.34,400 விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News