உள்ளூர் செய்திகள்

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் நாளை 1008 சங்காபிஷேகம்

Published On 2022-11-20 15:40 IST   |   Update On 2022-11-20 15:40:00 IST
  • இச்சங்காபிஷேகத்திற்காக பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து புனித நீரும், பல்வேறு புண்ணிய க்ஷேத்திரங்களிலிருந்து புனித மண்ணும் எடுத்து வரப்படுகிறது.
  • இச்சங்காபிஷேக புனித நீரை பிரசாதமாக பெற்று அருந்தும் பக்தர்களுக்கும் சகல பாவங்களும்நீங்குவதாகவும், சகல சௌபாக்கியங்களைப் பெறுவர்.

திருவையாறு:

தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு நாளை மாலை ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.

மேலும், 28, 5 மற்றும் 12 ஆகிய மூன்று சோம வாரங்களிலும் ஸ்ரீ ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.இச் சங்காபிஷேகத்தின் போது ஆலய பிரசங்க மண்டபத்தில் ஸ்ரீ ருத்ர பாராயணம், ஸ்ரீ ருத்ர ஹோமம், வேத பாராயணம். திருமுறை இன்னிசை மற்றும் புனித நீர் கலச ஆராதனைகளும் நடக்கிறது.

இச்சங்காபிஷேகத்திற்காக பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து புனித நீரும், பல்வேறு புண்ணிய க்ஷேத்திரங்களிலிருந்து புனித மண்ணும் எடுத்து வரப்படுகிறது.

இவற்றுடன் பல மூலிகைகள், மருந்துப் பொருட்கள், பச்சிலைகள், தானியங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் ஆகியவைகள் கலந்து, 1008 வெண்சங்குகளில் நிரப்பி, வேத பாராயணம் மற்றும் ஹோமம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும், இச்சங்காபிஷேக புனித நீரை பிரசாதமாக பெற்று அருந்தும் பக்தர்களுக்கும் சகல பாவங்களும்நீங்குவ தாகவும், சகல சௌபாக்கியங்களைப் பெறுவர் எனவும், அகால மரணம் எய்த மாட்டார் எனவும், 4446 நோய்களிலிருந்து விடுபடுவர் எனவும் புராணங்களும், வேதாகம ங்களும், திருமுறை களும் கூறுகின்றனஇச்சங்கா பிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர்கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News