உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத இழப்பீடு பெற்று தர வேண்டும்

Published On 2023-02-03 08:14 GMT   |   Update On 2023-02-03 08:14 GMT
  • கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 90 சதவீத அறுவடை பணிகள் நடைபெறவில்லை.
  • கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது 10 சதவீத அறுவடை பணிகள் மட்டுமே நிறைவடைந்தது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மீதமுள்ள 90 சதவீத அறுவடை பணிகள் நடைபெறாமல் கேள்விக்குறி ஆகியுள்ளது.

இந்நிலையில், காப்பீடு நிறுவனம் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அறுவடை பரிசோதனையை முடித்துவிட்டதாக கூறுவது வேதனை அளிக்கிறது.

விவசாயிகள் வங்கிகளில் வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்துள்ளனர்.

எனவே, காப்பீட்டு நிறுவனம் மீண்டும் அந்த பகுதிகளில் புதிய அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கபட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும், மேலும், மேம்படுத்தபட்ட பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 100 சதவீத இழப்பீடு பெற்று தர வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் கமல்ராம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News