உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கம்பம் அருகே கொலை வழக்கில் மாட்டு வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை

Published On 2022-08-17 04:36 GMT   |   Update On 2022-08-17 04:36 GMT
  • கொலை வழக்கில் மாட்டு வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
  • இதில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

தேனி:

கம்பம் அருகே சுருளிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த மாட்டு வியாபாரி காரமணி(58). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதேபகுதியில் தனது மோட்டார் சைக்கிளை பாதையை மறித்து நிறுத்தினார். இதனை கூலித்தொழிலாளி அய்யாதுரை என்பவர் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் அய்யாத்துரையின் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளியதில் அவர் பேச்சுமூச்சில்லாமல் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அய்யாத்துைரயை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து காரமணியை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா காரமணிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சரவணன், நீதிமன்ற காவலர் கிறிஸ்துராணி ஆகியோரை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் ேடாங்கரே பாராட்டினார்.

Tags:    

Similar News