உள்ளூர் செய்திகள்

உடல்நல குறைவால் 10 மாத பெண்குழந்தை சாவு

Published On 2023-09-07 15:34 IST   |   Update On 2023-09-07 15:34:00 IST
  • ஷிவானிக்கு திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டது.
  • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு லக்ஷனா (வயது3), பிறந்து 10 மாதங்கள் ஆன ஷிவானி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷிவானிக்கு திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டதால், பதறிப்போன பெற்றோர், உடனே அதேபகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்தி–ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் அதிய–மான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரி–வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்–தியது.

Tags:    

Similar News