உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள்

10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியீடு

Published On 2022-06-16 07:17 GMT   |   Update On 2023-06-06 11:21 GMT
  • 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20ம் தேதிவெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜூன் 20-ஆம் தேதிக்கு காலை 12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து முடிவுகளை இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1tn.nic.in, www.dge2tn.nic.in, www.dgetn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தனித்தனியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் வெளியாகிறது.

Tags:    

Similar News