உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியில் ஈடுபட்ட அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றபோது எடுத்த படம்.

காயல்பட்டினம் கடற்கரையில் 1 டன் குப்பைகள் அகற்றம் - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

Published On 2023-04-10 08:46 GMT   |   Update On 2023-04-10 08:46 GMT
  • காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி திட்ட முகாம் நடந்தது.
  • துணைத்தலைவர் சுல்தான் லெப்பை உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி:

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற நோக்கத்தை வலியுறுத்தி காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி திட்ட முகாம் நடந்தது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார் சிங் வழிகாட்டுதலின்படி, நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.

இதில் துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சுகு ரெங்கநாதன், கதிரவன், பூங்கொடி, சுயஉதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். தூய்மை பணியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர். இந்த சுகாதாரப் பணியின் போது காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News