உள்ளூர் செய்திகள்

கை.முருகனின் உருவப் படத்திற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி. 

கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி- மாவட்ட தி.மு.க. சார்பில், பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்

Published On 2023-08-13 14:12 IST   |   Update On 2023-08-13 14:12:00 IST
  • கை.முருகன் உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
  • ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் கை.முருகன் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

ஆலங்குளம்:

கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவரும், முன்னாள் தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான கை.முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி கல்லூத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன் தலைமை தாங்கினார். கை.முருகன் உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு, கை.முருகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவியினை நிர்வாகிகள் முன்னிலையில் கை.முருகன் குடும்பத்தினரிடம் வழங்கினார். பின்னர் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், துணை செயலாளர்கள் தமிழ்செல்வன், கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், அழகு சுந்தரம், ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பொன்செல்வன், சமுத்திரபாண்டி, முத்துராஜ், பழனிசாமி, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம். எஸ்.ராஜன், பெத்த நாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், இளைஞரணி கோமு,மாவட்ட இளைஞரணி கிருஷ்ணராஜ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி சிவராஜன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், குறும்பலாப்பேரி இளங்கோ, சுரேஷ் கண்ணா, தினேஷ், தங்கச்சாமி, தளபதி முருகேசன், தங்கேஸ்வரன், நாராயண சிங்கம், பாண்டி, காசிபாண்டி, சீனி நம்பியார், ராஜசேகர், ஜெகன், சீதாராமர், காளி முத்து, லிங்கம் திருமலைகுமார், அழகுதமிழ், மாறன், சுதன் ராஜா, ராம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News