செய்திகள்
புனித் ராஜ்குமார்

நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

Published On 2021-10-31 05:34 IST   |   Update On 2021-10-31 05:34:00 IST
நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள், திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு:

கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் (46) நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அங்குள்ள கன்டீரவா மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர். 

மேலும், மாநிலம் முழுவதும் இருந்து வந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்தது.

இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Similar News