செய்திகள்
சன்னி லியோன்

சொன்னபடி நிகழ்ச்சிக்கு போகாததால் மோசடி புகார் -சன்னி லியோனிடம் போலீசார் விசாரணை

Published On 2021-02-07 12:35 IST   |   Update On 2021-02-07 16:27:00 IST
பண மோசடி புகார் தொடர்பாக பிரபல இந்தி நடிகை சன்னி லியோனிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கொச்சி:

29 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோனிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்பின் தலைவர் ஆர்.ஷியாஸ் என்பவர், அம்மாநில டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 29 லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க வரவில்லை என சன்னி லியோன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சன்னி லியோனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படை​யில், ஷியாசிடம் மேலும் தகவல்களை பெற்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

தன் மீதான குற்றச்சாட்டை சன்னி லியோன் மறுத்துள்ளார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேதி கொடுத்து, அதற்கான பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதனை முறையாக பயன்படுத்தவில்லை எனவும் சன்னி லியோன் கூறியிருக்கிறார். போட்டி ஏற்பாட்டாளர்கள் மீண்டும் தேதி குறித்தால், நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News