செய்திகள்
இந்தியாவில் ரெனால்ட் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன்
ரெனால்ட் இந்தியா நிறுவனம் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் டிஸ்னியுடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் பிரபல அவென்ஜர் சீரிஸ்களில் இடம்பெற்றிருக்கும் சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரங்கள் காரின் டீகல்களை அலங்கரிக்கின்றன. புதிய லிமிடெட் எடிஷன் இந்தியாவில் ரெனால்ட் குவிட் கேப்டன் அமெரிக்கா எடிஷன் அல்லது ரெனால்ட் குவிட் ஐயன் மேன் எடிஷன் என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ரெனால்ட் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் மாடல்களில் 1.0 லிட்டர் RXT ட்ரிம் வேரியண்ட் கொண்டிருக்கிறது. ரெனால்ட் குவிட் RXT ட்ரிம் மாடலை விட புதிய சூப்பர்ஹீரோ எடிஷன் விலை ரூ.29,000 அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சூப்பர்ஹீரோ எடிஷனை வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு கட்டணம் ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய சூப்பர்ஹீரோ எடிஷன் பிரபல மார்வெல் கதாபாத்திரங்களான ஐயன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்காவை பிரதிபலிக்கும் நிறங்களில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய RXT ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
ரெனால்ட் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சுழற்றக்கூடிய 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுகிறது.
இந்தியாவில் ரெனால்ட் குவிட் சூப்பர்ஹீரோ எடிஷன் விலை ரூ.4.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.