செய்திகள்

ஸ்கோடா கோடியக் இந்திய வெளியீட்டு தேதி

Published On 2017-09-10 15:49 IST   |   Update On 2017-09-10 15:49:00 IST
ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. ரக கார் மாடலான கோடியாக் இந்திய வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா RS மாடலை இந்தியாவில் வெளியிட்டது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா RS மாடல் கார் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த கார் விரைவில் வெளியாக இருக்கிறது. ஸ்கோடாவின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. ரக மாடலான கோடியக் இந்தியாவில் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது.

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் முழுமையான எஸ்.யு.வி. ரக மாடலாக கோடியக் இருக்கும். இந்த எஸ்.யு.வி. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB தளம் சார்ந்தது ஆகும். ஃபோக்ஸ்வேகன் MQB மாடல் சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா மாடல்களை சார்ந்தது ஆகும்.

கோடியக் எஸ்.யு.வி. மாடலின் முன்பக்கம் பட்டர்ஃபிளை கிரில், எல்இடி ஹெட்லைட், எல்இடி டேடைம் ரன்னிங் லைட் மற்றும் பின்புறம் டெயில் லைட் வரை செல்லும் ஷோல்டர் லைன் வழங்கப்பட்டுள்ளது.



புதிய கோடியக் எஸ்.யு.வி. 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 143bhp மற்றும் 320Nm டார்கியூ கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் தற்சமயம் அறிமுகம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. ஆக்டேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களிலும் இதே போன்ற இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ள எஸ்.யு.வி. இன்டீரியர் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் கொண்டுள்ளது. இத்துடன் ஆக்டேவியா மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற பார்கிகிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

இந்தியாவில் கோடியக் மாடலுடன் எஸ்.யு.வி. சந்தையில் ஸ்கோடா களமிறங்குகிறது. புதிய எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ரூ.27 ஸட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.32 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கோடியக் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு என்டேவர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

Similar News