இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்த பங்குச் சந்தை..!
- அல்ட்ரா சிமெண்ட் (22.1 சதவீதம்), ஐடிசி (2.01 சதவீதம்), டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி பங்குகள் சரிவு.
- சன் பார்மா, அதானி போர்ட்ஸ், நெஸ்ட்லே, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் 174.95 புள்ளிகளும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 82,176.45 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை 130 புள்ளிகள் குறைந்து 82,038.20 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் சுமார் 1050 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. பின்னர் மெல்லமெல்ல ஏற்றம் கண்டது. இன்று அதிக பட்சமாக 82,410.52 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,121.70 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 624.82 (0.76%) புள்ளிகள் சரிந்து 81,551.63 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 25,001.15 புள்ளியாக இருந்தது. இன்று காலை 5 புள்ளிகள் குறைந்து 24,956.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் 295 புள்ளிகள் வரை குறைந்து, குறைந்த பட்சமாக 24,704.10 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதன்பின் கடகடவென உயர்ந்தது. அதிபட்சமாக 25,062.90 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக 174.95 (0.70%) புள்ளிகள் சரிந்து 24,826.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அல்ட்ரா சிமெண்ட் (22.1 சதவீதம்), ஐடிசி (2.01 சதவீதம்), டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.சி.எல். டெக், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிசிஐ வங்கி பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்தூஸ்இந்த் வங்கி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், நெஸ்ட்லே, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.