ஏற்றத்துடன் தொடங்கி, சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தை
- இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 74,332.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 74,474.98 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தொழில்துறை, ஆயில் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் சரிவு, வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. 30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் 22 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 8 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தக முடிவில் 22,552.50 ஆக இருந்தது.
இன்று காலை 22,521.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக நிஃப்டி 22,429.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக நிஃப்டி 22,675.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 92.20 புள்ளிகள் சரிந்து 22,460.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு 38 பைசா குறைந்து 87.33 ரூபாயாக உள்ளது.