Stock market today: சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தை..!
- மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 155.77 புள்ளிகள் சரிவு.
- இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 81.55 புள்ளிகள் சரிவு
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 155.77 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு 81.55 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 80,796.84 புள்ளியாக இருந்தது. இன்று காலை சுமார் 111 புள்ளிகள் உயர்ந்து 80,907.24 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 80,981.58 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,481.03 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
இறுதியாக 155.77 புள்ளிகள் குறைந்தது சென்செக்ஸ் 155.77 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,461.15 புள்ளியாக இருந்தது. இன்று காலை 39 புள்ளிகள் உயர்ந்து 24,500.75 புள்ளியில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 24,509.65 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,331.80 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 81.55 புள்ளிகள் குறைந்து 24,379.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.