இரண்டு நாள் சரிவுக்குப் பின் இன்று உயர்வை சந்தித்த பங்குச் சந்தை
- மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 320.70 புள்ளிகள் உயர்ந்தன.
- இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 81.15 புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்தன. இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 320.70 புள்ளிகளும், நிஃப்டி 81.15 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் 81,312.32 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை சுமார் 270 புள்ளிகள் உயர்வுடன் 81,591.03 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 81,816.89 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,106.98 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 320.70 (0.39%) புள்ளிகள் உயர்ந்து 81,633.02 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,752.45 புள்ளியாக இருந்தது. இன்று காலை சுமார் 73 புள்ளிகள் உயர்வுடன் 24,825.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிக பட்சமாக 24,892.60 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,677.30 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 81.15 (0.33%) உயர்ந்து 24,833.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், நிஃப்டி 174.95 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
நேற்று (புதன்கிழமை) மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 73.75 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.