வணிகம் & தங்கம் விலை

டிரம்பின் வரிவிதிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது

Published On 2025-04-07 09:36 IST   |   Update On 2025-04-07 09:36:00 IST
  • டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
  • செக்செக்ஸ் இன்று காலை சுமார் 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி

ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.

கடந்த வாரம் சென்செக்ஸ் 930.67 புள்ளிகளும், நிஃப்டி 345.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் கடந்த வார வர்த்தக முடிவில் 75,364.69 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் 72, 735 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கடந்தவாரே வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை ஏறக்குறைய 800 புள்ளிகளில் சரிந்து 22,075 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 

Tags:    

Similar News