வணிகம் & தங்கம் விலை

இந்தியா-பாகிஸ்தான் மோதல்: சரமாரியாக சரிந்த பங்குச்சந்தை - என்ன நிலவரம்?

Published On 2025-05-09 10:58 IST   |   Update On 2025-05-09 10:58:00 IST
  • ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகள் சரிந்துள்ளன.
  • டாடா மோட்டார்ஸ், டைட்டன் ஆகியவற்றின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக இன்றைய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான பிஎஸ்இ சென்செக்ஸ் 829 புள்ளிகள் சரிந்து 79,505 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50, 255 புள்ளிகள் சரிந்து 24,018 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகள் சரிந்துள்ளன.

ஆசியன் பெயிண்ட், டாக்டர் ரெட்டி, கோடக் மகேந்திரா வங்கி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், டைட்டன் ஆகியவற்றின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதால் பங்குச்சந்தை வரும் நாட்களில் மேலும் சரிவை சந்திக்கும் என முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர். 

Tags:    

Similar News