செய்திகள்

யமஹா ஆர்25 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2018-09-06 11:07 GMT   |   Update On 2018-09-06 11:07 GMT
யமஹா நிறுவனத்தின் ஆர்25 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #YAMAHA


யமஹா நிறுவனத்தின் ஆர்25 மோட்டார்சைக்கிள் நவம்பர் மாதத்தில் அறிமுKம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 2018 இந்தோனேசியா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிளின் டீசரும் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

புதிய ஆர்25 மற்றும் ஆர்3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட முன்பக்கம், மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படலாம். இத்துடன் முன்பக்கம் தற்போதைய மாடலை விட கூர்மையாகவும், அதிரடியாகவும் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆர்3 மோட்டார்சைக்கிள் ஆர்15 மாடலை போன்று அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை யமஹா ஆர்25 மற்றும் ஆர்3 மாடலில் அப்சைடு-டவுன் ஃபோர்க் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இந்தியாவில் ஆர்3 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கி விலையை முடிந்தவரை குறைவாக நி்ர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



யமஹா ஆர்25 மாடலில் 249சிசி லிக்விட்-கூல்டு, பேரலெல் ட்வின் இன்ஜின் வழங்கப்படலாம் என்றும் இந்த இன்ஜின் 35 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 22.6 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஆர்3 மாடலில் 321சிசி லிக்விட்-கூல்டு, பேரலெல் ட்வின் இன்ஜின் வழங்கும் என்றும் இந்த இன்ஜின் 41.4 பி.ஹெச்.பி. பவர், 29.6 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும்.

யமஹா ஆர்25 மற்றும் ஆர்3 மாடலில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்றும் இவற்றில் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் வேரியபில் வால்வ் அக்டுயேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. மற்ற அம்சங்கள் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News