செய்திகள்

இந்தியாவில் 2018 ஸ்விஃப்ட்: ஸ்பை படங்கள்

Published On 2017-12-28 11:16 GMT   |   Update On 2017-12-28 11:16 GMT
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி 2018 ஸ்விஃப்ட் மாடலை விரைவில் இந்தியவில் வெளியிட இருக்கிறது.
மும்பை:

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி 2018 ஸ்விஃப்ட் மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், மும்பை அருகே நடைபெற்ற விளம்பர படப்பிடிப்பில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காணப்பட்டுள்ளது. புதிய ஹேட்ச்பேக் மாடலில் எவ்வித பேட்ஜும் இடம்பெறவில்லை.

புதிய ஸ்விஃப்ட் மாடலின் ஊடக பணிகளை மாருதி சுசுகி நிறுவனம் ஜனவரி 2018-ம் ஆண்டில் துவங்கி, பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஸ்விஃப்ட் பார்க்க சர்வதேச ஸ்விஃப்ட் மாடல் போன்று காட்சியளித்தாலும், அலாய் வீல்கள் மட்டும் வழங்கப்படவில்லை.



படப்பிடிப்பில் காணப்படும் புதிய ஸ்விஃப்ட் சிவப்பு நிறம் மற்றும் டூயல் டோன் அலாய் வீல்களை கொண்டிருப்பதால் இது டாப் எண்ட் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் வடிவமைப்பு, பிளாக்டு அவுட் பில்லர் உள்ளிட்டவை ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது.

2018 ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல் மாருதி சுசுகியின் HEARTECT தளம் சார்ந்து உருவாக்கப்பட்டிருப்பதால் தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் மாடலை விட எடை குறைவாக இருக்கும். மாருதி சுசுகியின் பலேனோ மற்றும் புதிய டிசையர் மாடல்களிலும் HEARTECT தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் முறையே 81 பி.எச்.பி. பவர் மற்றும் 74 பி.எச்.பி. பவர் வழங்கும் என்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் தேர்வு செய்யும் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News