சட்டசபை தேர்தல் - 2021
கோப்பு படம்

மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி

Update: 2022-04-17 05:49 GMT
தவளகுப்பத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:

தவளகுப்பம் அருகே தானாம் பாளையம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். சலவை தொழிலாளி இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

சண்முகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பாரிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்தார். 

இதனால் கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில்  சண்முகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு தாமதமாக வந்தார். இதனை ராஜேஸ்வரி தட்டிக்கேட்டார். 

இதில் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. பின்னர் ராஜேஸ்வரி குழந்தை-களுடன் தூங்கி விட்டார். ஆனால் ஆத்திரம் தீராத சண்முகம் 3.30 மணியளவில் வீட்டில் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து ராஜேஸ்வரியின் வயிற்றில் சராமாரியாக குத்தினார். மேலும் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று ராஜேஸ்வரியை மிரட்டி விட்டு சண்முகம் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அருகில் உள்ள உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராஜேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து ராஜேஸ்-வரியின் சகோதரர் ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News