ஐ.பி.எல்.(IPL)
வாக்குச்சாவடி மையம்

கல்யாண வீடு போல் அலங்கரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம்

Published On 2021-04-06 17:41 IST   |   Update On 2021-04-06 17:41:00 IST
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்குச்சாவடி மையம் திருமண வீடு போல வாழை மரம், தோரணங்கள் கட்டி அழகுபடுத்தப்பட்டிருந்தது.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, வெளியாத்தூர் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்குச்சாவடி மையம் திருமண வீடு போல வாழை மரம், தோரணங்கள் கட்டி அழகுபடுத்தப்பட்டிருந்தது. அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு பன்னீர் தெளிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டன.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலைவாணன், கிராம அலுவலர் பிரகாஷ் ஆகியோரது கூட்டு முயற்சியில் வாக்குச்சாவடி மையம் இவ்வாறு மாற்றப்பட்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களித்தனர்.

Similar News