ஐ.பி.எல்.(IPL)
சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு கொரோனா
தமிழகத்தில் ஏற்கனவே பல வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக குணசேகரன் (வயது66) போட்டியிடுகிறார். இவர் கட்சி தொண்டர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
உடனே வேட்பாளர் குணசேகரன் அதே ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே பல வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அவருக்கு சளி, இருமல் இருந்தது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிபடுத்தப்பட்டது.