ஐ.பி.எல்.(IPL)
மயானத்தில் உள்ள கல்லறைகளுக்கு மாலை அணிவித்த வேட்பாளர் ராசகுமார்

மயானத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர்

Published On 2021-03-19 12:11 IST   |   Update On 2021-03-19 12:11:00 IST
காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடும் ராசகுமார் சந்தைபேட்டை மயானத்தில் உள்ள கல்லறைகளுக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராசகுமார் போட்டியிடுகிறார். இவர் இன்று காரைக்குடி சந்தை பேட்டை மயானத்தில் உள்ள கல்லறைகளுக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இந்த நூதன பிரசாரம் குறித்து ராசகுமார் கூறுகையில், நான் காரைக்குடி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அனாதை பிணங்களை இதே கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்துள்ளேன். அவர்கள் ஆசி கிடைக்கவும், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அனைவரும் கடைசியில் இங்குதான் வரவேண்டும். இதை உணர்த்தும் வகையில் எனது பிரசாரத்தை இங்கிருந்து தொடங்கி உள்ளேன் என்று கூறினார்.


Similar News