ஐ.பி.எல்.(IPL)
திமுக, அதிமுக

போடி தொகுதியில் மும்முனை போட்டியில் களம் இறங்கும் வேட்பாளர்கள்

Published On 2021-03-15 16:16 IST   |   Update On 2021-03-15 16:16:00 IST
போடி தொகுதியில் பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.


தமிழக சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். அ.ம.மு.க. சார்பில் முத்துச்சாமி போட்டியிடுகிறார். இவர்கள் 3 பேருமே அ.தி.மு.க.வில் ஒன்றாக இணைந்து பணியாற்றியவர்கள். தற்போது எதிர் எதிர் துருவங்களில் களத்தில் உள்ளனர்.

முத்துச்சாமி 1982-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் கிளைச்செயலாளராகவும், சின்னமனூர் ஒன்றிய செயலாளராகவும், வேளாண்மை விற்பனைக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.ம.மு.க.வில் இணைந்த முத்துச்சாமி அக்கட்சியில் சின்னமனூர் ஒன்றிய செயலாளராகவும், தற்போது தேனி தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

போடி தொகுதியில் பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்களிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் 3 பேருமே 40 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் ஒரே அணியில் இருந்து பணியாற்றியவர்கள். தற்போது எதிர் எதிர் அணியில் களம் கண்டு தேர்தலை சந்திப்பது வாக்காளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்துவதே லட்சியம் என்று தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

Similar News