ஐ.பி.எல்.(IPL)
சகாயம்

சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை- சகாயம் பேட்டி

Published On 2021-03-15 13:08 IST   |   Update On 2021-03-15 16:50:00 IST
தமிழக சட்டசபை தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார்.
சென்னை:

சென்னையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* எனது தலைமையிலான அரசியல் பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது.

* சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை

* புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கி பதிவு செய்ய முடியாத சூழலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம்

கட்சியுடன் எங்களது இளைஞர்கள் களம் காண்பார்கள்.

* தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

* தமிழக சட்டசபை தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

* 2 கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் களம் காண்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

10 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டார்.

Similar News