செய்திகள்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு- வேளாண் அமைச்சர்

Published On 2021-08-14 05:34 GMT   |   Update On 2021-08-14 06:27 GMT
வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து  பேசியதாவது:-

* தமிழகத்தில் நிகர சாகுபடி பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* 10 லட்சம் ஹெக்டேர் இருபோக சாகுபடி பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 20 லட்சம் ஹெக்டேரோக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்.

* சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்.

* பணப்பயிர் வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம்பிடிக்கும்.

* தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பது கண்றியப்பட்டுள்ளது.

* முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாடு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

* இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும்.

* தோட்டக்கலைத்துறையின் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும்.

* தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி ரூ.21.8 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

* ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும்.
Tags:    

Similar News