செய்திகள்
கரன்சி

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு இல்லை

Published On 2021-08-13 08:22 GMT   |   Update On 2021-08-13 11:13 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
சென்னை:

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட் உரையில் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை 1-7-2021 முதல் முன்தேதியிட்டு செயல்படுத்தப்படும்.

* அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும்.

* அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகாலுக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு.
* பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெறும் உயிரியல் அகழ்ந்தெடுக்கும் பணி விரைவுபடுத்தப்படும்
*சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
* ஊரக புத்தாக்க திட்டம் சீரமைக்கப்பட்டு ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
* நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் தரம் உயர்த்தப்படும்
* சென்னையிலுள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடியில் தீவிரமாக செயல்படுத்தப்படும்



* அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் ஆற்றல் திறன்மிக்க தெருவிளக்குகள் நிறுவப்படும்
* கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை-ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள்
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு
* நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதி தேவையை உறுதிசெய்ய 9,53,446 குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்
* தமிழக அரசின் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு
* ஊரக புத்தாக்க திட்டம் சீரமைக்கப்பட்டு ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
* அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீ.க்கு 4 வழிச்சாலைகள்
* புதிதாக பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு
* மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703 கோடி ஒதுக்கீடு

* 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையானது 1,303 ஆக உயர்த்தப்படும்
* தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு
* மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு
* அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்
* திருவள்ளூர் மாநல்லூரில் மின் வாகனப் பூங்கா, ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும்
* ஓசூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை
* சென்னை காவனூரில் 2வது கட்டமாக நிதிநுட்ப நகர் உருவாக்கப்படும்
* தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி முதலீட்டை ஊக்குவிக்க ரூ.1000 கோடியில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா
* விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காங்கள் உருவாக்கப்படும்
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு
* மகளிர் கல்வி, முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கீடு
* இலவச பள்ளிச்சீருடைகள் விநியோக திட்டத்திற்கு ரூ.409.30 கோடி நிதி ஒதுக்கீடு.
Tags:    

Similar News