செய்திகள்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

வரி முறையை சீர்செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும்- நிதியமைச்சர்

Published On 2021-08-13 07:17 GMT   |   Update On 2021-08-13 07:17 GMT
1921ஆம் ஆண்டு முதலான தமிழக சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
சென்னை:

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

அரசின் கடன்சுமையை சரிசெய்து நிதிநிலைமை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள 'வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும்.

1921ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும். வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும். ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.

அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News