செய்திகள்
தடுப்பணை

அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2021-08-13 06:05 GMT   |   Update On 2021-08-13 09:16 GMT
குக்கிராமங்களில் அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:-

* சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
* பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437.57 கோடியாக உயர்வு
* மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை
* அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்
* பொது விநியோக திட்டத்தின்கீழ் தேவையான இடங்களில் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும்



* குக்கிராமங்களில் அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்படும்
* 2021 - 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111.24 கொடி ஒதுக்கீடு
* தமிழ்நாட்டில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
* நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடியில் மீண்டும் செயல்படுத்தப்படும்
* மாநகராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்
* பேரூராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 90 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
Tags:    

Similar News